“என்னைத் தொடாதே” முதலிரவில் கத்தியை எடுத்த புதுப்பெண்… காலையில் மயங்கிக்கிடந்த மாப்பிள்ளை குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 21-ம் தேதி சுனில் மற்றும் மோனிகா ஆகியோருக்கு மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது. மகிழ்ச்சியுடன் புகுந்த வீட்டிற்குள் நுழைந்த மோனிகா, முதலிரவு அன்றே தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். அன்றிரவு சுனிலை நெருங்க விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், கத்தியால் அவரைத் தாக்கி, “என்னைத் தொடாதே” என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சுனில், அன்று இரவு முழுவதும் தனி படுக்கையில் உறங்கியுள்ளார்.

மறுநாள் காலையில் இந்தச் சம்பவம் குறித்து மோனிகாவின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மோனிகாவும் மனம் மாறியது போல நடித்து அனைவரையும் நம்ப வைத்தார். கடந்த 25-ம் தேதி, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மிகுந்த பாசத்துடன் மோனிகாவே சமைத்துப் பரிமாறினார். குறிப்பாகத் தனது கணவர் சுனிலுக்குத் தனது கைகளாலேயே ஊட்டி விட்டார். ஆனால், அந்த உணவில் மயக்க மருந்து கலந்திருந்தது யாருக்கும் தெரியவில்லை.

   

உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சுனில் உட்படக் குடும்பத்தினர் அனைவரும் மயக்கமடைந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட மோனிகா, வீட்டில் இருந்த 10 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 18 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைச் சுருட்டிக்கொண்டு, தனது சித்தப்பாவுடன் வீட்டை விட்டுத் தப்பியோடிவிட்டார். கல்யாணம் என்ற பெயரில் அரங்கேறிய இந்த ‘நாகினி’ ஸ்டைல் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.