பெங்களூரு கோனானகுண்டே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலில் ஈடுபட்ட நந்தன் மற்றும் அப்பெண்ணின் உறவு, சில தனிப்பட்ட காரணங்களால் முறிவில் முடிவடைந்துள்ளது. தன்னை விட்டுப் பிரிந்து சென்ற பெண்ணின் மீது கொண்ட ஆத்திரத்தில்தான் நந்தன் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.
பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இருந்த நந்தன், அப்பெண்ணின் மைத்துனருக்குச் சொந்தமான மோட்டார் சைிகக்கிளைத் தேடிச் சென்று தீயிட்டு கொளுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்த வாகனம் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2115375519604900319/video/1
இந்தத் தீவைப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோனானகுண்டே காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக உள்ள நந்தனைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
