“ஒன்றாகச் சாகலாம் வா” காதலியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட காதலன்.. தற்கொலை நாடகம் ஆடிய காமக்கொடூரன்.. அதிரவைக்கும் சிசிடிவி ஆதாரங்கள்…!!

By Soundarya on தை 31, 2026

Spread the love

கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூரில், தற்கொலை என நம்பப்பட்ட 26 வயது இளம்பெண்ணின் மரணம், அவரது காதலனால் நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலை என போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஏலத்தூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தடம்மாட்டுத்தாழத்தைச் சேர்ந்த 36 வயதான வைஷாகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான வைஷாகன், கடந்த 12 ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். இளம்பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், தனது குடும்ப ரகசியம் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வைஷாகன் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 24-ம் தேதி, “நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம்” என்று ஆசை வார்த்தை கூறி, மரிக்காராவிலுள்ள தனது பணிமனைக்கு அந்தப் பெண்ணை அழைத்து வந்துள்ளார். அங்கு அவருக்குத் தூக்க மாத்திரை கலந்த ஜூஸைக் கொடுத்து மயக்கமடையச் செய்த பின், தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டது போலச் சித்தரித்துக் கொலை செய்துள்ளார்.பெண் உயிரிழந்த பிறகும், அவரது சடலத்துடன் வைஷாகன் உடலுறவு கொண்டதாகத் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு 16 வயது இருக்கும் போதிலிருந்தே அவரை வைஷாகன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததால், அவர் மீது தற்போது போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணிமனையிலிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் அப்பெண்ணின் டைரியில் இருந்த குறிப்புகள் மூலம் வைஷாகனின் கொடூரச் செயல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன