பெங்களூருவில் மகளைத் திருமணம் செய்து தர மறுத்த தாயைக் காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பசவேஸ்வரநகர், போவி காலனியைச் சேர்ந்தவர் கீதா. இவர் தனது மகளை ஒரு இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், கீதா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட கீதா வலியால் அலறியபோதும், எவ்வித இரக்கமுமின்றி அந்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பலத்த தீக்காயமடைந்த அந்தப் பெண், உடனடியாக மீட்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பசவேஸ்வரநகர் போலீசார், தப்பியோடிய அந்த இளைஞனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…