கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..”அம்மா எழுந்திருமா” கொதிக்கும் தார் சாலையில் வெறுங்காலோடு ஓடித் தாயைக் காத்த 8 வயது மகன்… உதவி செய்யாமல் வீடியோ எடுத்த கல்நெஞ்சம்..!!

By Soundarya on சித்திரை 2, 2026

Spread the love

கான்பூரில் எடுக்கப்பட்ட நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று, மனிதாபிமானத்தின் உச்சத்தையும், நவீன சமூகத்தின் அவலத்தையும் ஒரே நேரத்தில் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. அந்த வீடியோவில், சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரம் ஒரு ஏழைத் தாய் மயக்கமடைந்து கிடக்கிறார். சுமார் 8 அல்லது 9 வயது மதிக்கத்தக்க அவரது மகன், காலில் காலணி கூட இல்லாமல் வெறும் காலோடு ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து, தனது தாயின் முகத்தில் தெளித்து அவரை நினைவு திரும்பச் செய்யப் போராடுகிறான்.

தாய் மீதான அந்தச் சிறுவனின் அர்ப்பணிப்பும், அவன் காட்டிய கடமையுணர்வும் பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன. வறுமையின் பிடியில் இருந்தாலும், சுட்டெரிக்கும் தார் சாலையின் வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுவன் காட்டிய வேகம், ஒரு மகனாக அவன் தனது கடமையைச் செவ்வனே செய்ததை உணர்த்துகிறது. அதே சமயம், இந்தச் சோகமான காட்சியின் மறுபக்கம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

   

   

இந்தத் துயரமான நிகழ்வை நேரில் பார்த்த ஒருவர், அந்தச் சிறுவனுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, ஏதோ சினிமா காட்சியைப் படம்பிடிப்பது போலத் தனது அலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். ஏசி அறைகளிலும் சொகுசு வாழ்க்கையிலும் வாழும் ‘படித்த’ சமூகம், சக மனிதனின் வலியை வெறும் ஒரு ‘காட்சியாக’ மட்டுமே பார்ப்பது மனிதாபிமானத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. அந்தச் சிறுவன் காலணி இல்லாமல் காட்டிய மனித நேயத்தில் ஒரு துளியைக் கூட, காலணி அணிந்த அந்தப் பெரியவர்களால் காட்ட முடியாமல் போனது பெரும் வேதனையை அளிக்கிறது.