பாம்பை கண்டால் படையே நடுங்கும். அப்படி இருக்கும்போது ஒரு சிறுவன் பாம்பை வைத்து விளையாடிய காட்சி அனைவரையும் பதற வைத்தது. சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோவில், ஒரு சிறுவன் நடுரோட்டில் குறும்புத்தனமாக கயிற்றால் கட்டப்பட்ட பாம்பை இழுத்துக் கொண்டு ஓடினான். அந்தப் பாம்பை பார்த்ததும் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் சிறுவன் அந்த கயிறை பிடித்துக் கொண்டே ஓடினான். அந்தப் பாம்பு உண்மையானதா போலியானதா என்பது தெரியவில்லை. அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடமும் உறுதி செய்யப்படவில்லை. சிறுவனின் குறும்பு செயலை பார்த்து பலரும் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Bada hi shaitaan baccha hai 😂 pic.twitter.com/hef6ph21Q3
— Aditya Tiwari ❤️👻 (@aditiwari9111) August 30, 2025
