தாய்லாந்தில் நாய்களோடு வளர்ந்த எட்டு வயது சிறுவன் மனிதர்களிடம் பேசாமல் நாய் போல குரைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சிறுவனின் தாயும் அண்ணனும் போதைக்கு அடிமையானதால் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் பராமரிக்காமல் இருந்துள்ளார்கள். அங்கு அவன் கிட்டத்தட்ட முற்றிலும் தனிமையில் வளர்க்கப்பட்டு, குரைப்பதன் மூலம் மட்டுமே மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளக் கற்றுக்கொண்டான்.
நண்பர்கள் இல்லாமல், பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல், நாய்கள் மட்டுமே துணையாக இருந்ததால், சிறுவன் அந்த நாய்களின் நடத்தையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். பேசுவதற்குப் பதிலாக குரைப்பதன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் வெளிவந்த நிலையில் அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு பராமரிப்பும் கல்வியும் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
