“அநாகரீகமாக நடந்துகொண்ட மேலாளர்…” வீடியோ எடுத்தா போனை பிடுங்குவீங்களா?… நடுரோட்டில் விரட்டிச் சென்று மிரட்டிய பிரபல ஹோட்டல் ஊழியர்… இறுதியில் எடுத்த அதிரடி முடிவு…!

Spread the love

பெங்களூரு செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பிரபல உணவகமான ‘ட்ரஃபிள்ஸ்’ கிளையில், உணவு வலைப்பதிவர்கள் இருவருடன் ஏற்பட்ட மோதல் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்திற்கு வந்த வ்லாகர்கள் தங்களுக்கு பரிமாறப்பட்ட உணவை காணொளி எடுத்தபோது, அங்கிருந்த மேலாளர் ஒருவர் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளார். “இது பொது இடம் அல்ல, இங்கு வீடியோ எடுக்க அனுமதி இல்லை” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வ்லாகர்கள் உணவகத்தை விட்டு வெளியேறி சாலையோரத்தில் வீடியோ பதிவு செய்தபோதும், அந்த ஊழியர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து மொபைல் போனைப் பறித்து அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் உணவகத்தின் இந்த மோசமான அணுகுமுறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

https://www.instagram.com/p/Da2r_nDplLI/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, ‘ட்ரஃபிள்ஸ்’ உணவக நிர்வாகம் அதிகாரப்பூர்வ மன்னிப்புக் கோரியுள்ளது. இந்தச் சம்பவம் தங்களின் நிறுவன மாண்புகளுக்கு எதிரானது என்றும், வாடிக்கையாளர்களிடம் இத்தகைய நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட உள்விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊழியர் பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்றும் அந்த உணவக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Visaka

Recent Posts

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

4 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

13 minutes ago

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

29 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

40 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

43 minutes ago