பரபரக்கும் அரசியல்..! விஜய்க்கு அடுத்தடுத்த அழைப்பு… தவெகவுடன் கூட்டணி வைக்க அடிபோடும் பாஜக…!!!

By Soundarya on மார்கழி 29, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையுமாறு பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். “பொது எதிரியை வீழ்த்துவதற்காகவே கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் திமுகவை ஒன்றிணைந்து வீழ்த்துவதற்கு விஜய்க்கு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு விடுக்கப்படும் இந்தத் தொடர் அழைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றன.

திமுக அரசு குறித்துக் கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன், பிரிவினையைத் தூண்டும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே தங்களின் நோக்கம் என்று கூறினார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கிச் செயல்படும் போது, ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே சிபிஐ விசாரணை நெருக்கடியில் தவெக நிர்வாகிகள் உள்ள நிலையில், பாஜகவின் இந்த பகிரங்க அழைப்பு தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.