BREAKING: மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி பலி.. காலையிலேயே சோகம்..!!

By Soundarya on ஆனி 4, 2026

Spread the love

பீஹார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள ‘பிரசாத்’ என்ற தனியார் ஹாஸ்பிடலில் அதிகாலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருந்த 10 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுத் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், நாட்டை உலுக்கும் வகையில் அடுத்த கோர விபத்தாக இந்த மருத்துவமனைத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது