Connect with us

‘குக் வித் கோமாளி’ புகழ் தன் செல்ல மகளை முதன்முதலாக வெளி உலகிற்கு காட்டிய அழகிய தருணம்… ‘தொட்டில் விழா’ வீடியோ வைரல்…

CINEMA

‘குக் வித் கோமாளி’ புகழ் தன் செல்ல மகளை முதன்முதலாக வெளி உலகிற்கு காட்டிய அழகிய தருணம்… ‘தொட்டில் விழா’ வீடியோ வைரல்…

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதல் முதலில் அறிமுகமானார் புகழ். பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. சின்னத்திரையில் கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்பொழுது வெள்ளித்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார். சிறு சிறு துணைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் ‘ஜூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

   

புகழ் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கோமாளியாக அசத்தி வந்தார். இந்நிலையில் புகழ் மனைவி பென்சி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் புகழ் மனைவி பென்சியின் வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது புகழ் அவரது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக்கிறார். பு.ரித்தன்யா என அவர் மகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறார். தற்பொழுது புகழ் தன் மகளின் தொட்டில் விழாவை நடத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Continue Reading
To Top