தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த கனெக்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்பொழுது இவர் ஜவான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்கள் இருவரும். ஆனால் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த அவர்கள் தங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதை தொடர்ந்து இருவரும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா தனது குழந்தையை முதன் முதலில் கையில் தூக்கிய பொழுது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

