விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), 1980களில் அ. மலைச்சாமி என்பவரால் ‘தலித் சிறுத்தைகள்’ என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு இயக்கமாகத் தொடங்கப்பட்டது. 1989-ல் மலைச்சாமியின் மறைவுக்குப் பிறகு, மதுரையில் தடய அறிவியல் துறையில் பணியாற்றி வந்த தொல். திருமாவளவன் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதனைத் தொடர்ந்து, 1990-ஆம் ஆண்டு இந்த அமைப்பின் பெயரை ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ என அதிகாரப்பூர்வமாக மாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான அரசியல் பேரியக்கமாக அவர் வழிநடத்தத் தொடங்கினார்.
ஆரம்பகாலத் தேர்தல்களில் விசிக பல்வேறு சவால்களையும் அரசியல் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. தமிழகத்தின் 13-ஆவது சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி முதன்முறையாக 2 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதன் பின்னர் வந்த தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதிலும், வெறும் 2 அல்லது 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்ததால், அரசியல் அரங்கில் “2 சீட்டு விசிக” என்று பலரால் கேலி செய்யப்பட்டது. இருப்பினும், தங்களுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் மூலம் ஆட்சியில் பங்கு பெற வேண்டும், அதன்வழியாக ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கனவை விசிக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அந்த நீண்ட கால அரசியல் போராட்டத்திற்கும் ஏளனப் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வரலாற்றுத் திருப்புமுனை 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்துள்ளது. இத்தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த விசிக, தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதன் மூலம், தங்களின் நீண்ட நாள் கனவான “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கையை நனவாக்கி, தமிழக அரசியல் வரலாற்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர்…
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…
10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…
பாஜகவின் தேசிய தலைமை, நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை நியமித்து…
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…