கோட்டையில் தளபதி கொடி பறக்குமா.? திராவிட கோட்டை நிமிருமா.? தேசத்தையே அதிரவைத்த ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு..!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில், ‘AXIS MY INDIA’ வெளியிட்டுள்ள எக்சிட் போல் கணிப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் தமிழகத்தின் பக்கம் திரும்ப வைத்துள்ளது. யாரும் எதிர்பாராத ஒரு மெகா திருப்பமாக, களம் கண்ட முதல் தேர்தலிலேயே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகத் தமிழக அரசியலை ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிடக் கட்சிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக 92 முதல் 110 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படும் என்றும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெறும் 22 முதல் 32 இடங்களை மட்டுமே பெற்று மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும் என்றும் இக்கணிப்பு கூறுகிறது. கோட்டையில் ‘தளபதி’ கொடி பறக்கப் போகிறதா அல்லது திராவிடக் கோட்டைகள் மீண்டும் நிமிருமா என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும் என்றாலும், ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு இப்போது இணையத்தில் அனலைக் கிளப்பி வருகிறது.

   

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விருப்பத்திலும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (35%) பின்னுக்குத் தள்ளி, 37 சதவீத ஆதரவுடன் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். பெண்களின் இந்தத் திடீர் மனமாற்றமும், குறிப்பாக 18 முதல் 19 வயது வரையிலான முதல்முறை வாக்காளர்களில் 68 சதவீதம் பேர் தவெக-விற்கே தங்களது ஆதரவை வழங்கியுள்ளதும் திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. மே 4-ஆம் தேதி இந்த மாற்றங்கள் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.