“கார் வரும், அட்ஜஸ்ட் பண்ணு…” ஒரு மணி நேரத்திற்கு 20 லட்சம்… சித்தியின் ஆசை வார்த்தை… இளம்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By SATHISH R on ஆடி 7, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில், பணத்தாசைக்காக சொந்த அக்கா மகளையே ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சித்தியின் கொடூர செயல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது தாயாரின் சகோதரியான புஷ்பா தேவி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் இணைந்து கடந்த சில நாட்களாகக் குறிவைத்துள்ளனர்.

   

அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறிய புஷ்பா தேவி, “நாங்கள் சொல்லும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்தால் மொத்தம் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும்; அதில் உனக்கு நேரடியாக 20 லட்சம் ரூபாய் தருவோம், மீதித் தொகையை வேலை வாங்கித் தந்ததற்காக நானும் அந்த வாலிபரும் எடுத்துக்கொள்வோம்” எனக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து வீட்டில் உள்ள யாரிடமும் மூச்சுவிடக் கூடாது என்றும் அந்த இளம்பெண்ணை அவர்கள் மிரட்டி ரகசியமாக வைத்துள்ளனர்.

   

ஒரே ஒரு வேலைக்கு 20 லட்சம் ரூபாய் கிடைப்பதாகக் கூறியதால் சந்தேகமடைந்த அந்த இளம்பெண், அது என்ன வேலை என்று தன் சித்தியிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டுள்ளார். அதற்கு புஷ்பா தேவி, “உன்னை அழைத்துச் செல்ல ஒரு கார் வரும், அதில் ஏறி பக்கத்து மாவட்டமான அசம்காருக்குச் சென்று அங்கு ஒரு மணி நேரம் மட்டும் அட்ஜஸ்ட் செய்துவிட்டு வந்தால் போதும்” எனக் கூறி, அங்கு ஆபாசமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற தனது வஞ்சகமான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த இளம்பெண் உடனடியாக அந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த புஷ்பா தேவியின் கூட்டாளியான வாலிபர், இளம்பெண்ணைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த இளம்பெண், உடனடியாகத் தன் பெற்றோரிடம் விபரத்தைக் கூறி, அவர்களின் உதவியுடன் துல்லஹ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தலைமறைவாக உள்ள சித்தி மற்றும் அந்த வாலிபரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்