கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் ஆசிரியரையே தாக்கும் துணிகரம் இன்றைய மாணவர்களிடையே பெருகி வருவது சமூகத்தின் மிகப்பெரிய வீழ்ச்சியைக் காட்டுகிறது. ஒரு காலத்தில் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்பட்ட ஆசிரியர்கள், இன்று தங்கள் கடமையைச் செய்யவே அச்சப்படும் சூழல் நிலவுவது வேதனைக்குரியது.
மேலும் “சிறுவன் தானே” என்று இத்தகைய வன்முறைகளை மெத்தனமாக எடுத்துக் கொள்வது, எதிர்காலத்தில் ஒரு சமூக விரோதியை உருவாக்குவதற்கு நாமே பாதை அமைத்துக் கொடுப்பதைப் போன்றதாகும். ஆசிரியரைத் தாக்கும் அளவிற்குத் துணிச்சலும் வன்மமும் கொண்ட ஒருவன், வளர்ந்த பிறகு சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறுவான் என்பதை நாம் உணர வேண்டும்.
படிப்பு சொல்லி குடுக்கும் ஆசிரியரயே நெஞ்சுல அடிக்குறான் 😥😥
சின்ன பையன்லாம் பார்க்காதிங்க இந்த நாயலாம் என்கவுன்டர் பன்னுங்க வளர்ந்த பிறகு என்ன என்ன பொறுக்கி தனம் பன்னுமோ 🙄🙄🙄 pic.twitter.com/DKFHFvVpMi
— சங்கர் ரஜினி ரசிகன் (@Rajinirasigan53) March 5, 2026
“>
இதனால் இளம் வயதிலேயே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டமும் சமூகமும் மிகக் கடுமையான பாடத்தைக் கற்பிக்க வேண்டும். வெறும் அறிவுரைகளோ அல்லது சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளோ மட்டும் போதாது அவர்களின் செயலுக்கான விளைவு மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தண்டனைகள் அமைய வேண்டும்.
இந்நிலையில் வன்முறையைத் தூண்டும் திரைப்படங்களும், போதிய ஒழுக்கக் கல்வி இல்லாததும் இத்தகைய செயல்களுக்குக் காரணமாக இருந்தாலும், தவறு செய்பவன் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கருணையின்றி கடும் நடவடிக்கை எடுப்பதே வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
