புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சௌத்ரி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், 20 வயதான சியா 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர் என்றும், அவருக்கு மதுப்பழக்கம் உள்ளிட்ட பல கெட்ட பழக்கங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சியா ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் பழகி வந்ததாகவும், இதனால் கோபமடைந்த அவரது பெற்றோர், நன்கு படித்து வசதியாக இருந்த கேதன் அகர்வாலுக்கு சியாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
குடும்பத்தின் வற்புறுத்தலால் கேதனுடனான திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட போதிலும், சியா தனது காதலன் சேத்தனுடன் சேர்ந்து கேதனை கொலை செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். ஜூன் 18 அன்று லோஹகாட் கோட்டையில் வைத்து கேதனை அவர்கள் கொலை செய்துள்ளனர். நிச்சயதார்த்தத்தை நிறுத்தினால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் என்று பயந்தே, அவர்கள் இருவரும் இந்த கொலைத் திட்டத்தைத் தீட்டியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், சியா தான் இந்த முழு சதியின் முக்கிய சூத்திரதாரி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து சியாவின் தந்தை பிரவீன் கோயல் உருக்கமாகப் பேசியுள்ளார். ஒரு தந்தையாக இருந்தாலும் தான் நீதியின் முன் குறுக்கே நிற்க மாட்டேன் என்று கூறிய அவர், நீதிமன்றத்தில் தனது மகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவளுக்கு கடுமையான தண்டைனை, தூக்குத் தண்டனை கூட வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், உணர்ச்சிவசப்பட்ட அவர், “என் மகள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கேதன் அகர்வால் எந்தக் கோட்டையிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டாரோ, அதே கோட்டையிலிருந்து அவளையும் கீழே தள்ளிவிட வேண்டும்” என்று கடுமையான வாக்குமூலம் அளித்துள்ளார்.
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…