துரோகத்தின் உச்சம்!… கணவனின் ஸ்னாப்சாட் பார்த்த மனைவி.. உள்ளே காத்திருந்த பேரதிர்ச்சி… பி.எச்டி முடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்….!!!

By Muthu Mani on வைகாசி 12, 2026

Spread the love

கான்பூரில் பி.எச்டி (PhD) முடித்த ஒரு பெண், பெண் குழந்தை பிறந்த காரணத்திற்காகத் தனது கணவரால் கைவிடப்பட்டு, ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தபோது, கணவரின் ஸ்னாப்சாட் (Snapchat) கணக்கை தற்செயலாகப் பார்த்துள்ளார். அப்போதுதான், தனது கணவர் ரகசியமாகத் தனது காதலியுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது அவருக்குத் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண் அடுக்கியுள்ள புகார்கள் மிகவும் கொடூரமானவை. தனது புகாரில், புகுந்த வீட்டினர் தன்னை இரண்டு முறை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்ததாகக் கூறியுள்ளார். மூன்றாவது முறை கர்ப்பமாக இருந்தபோது பெற்றோர் வீட்டிற்கு வந்த சமயம் பார்த்து, கணவர் இந்த இரண்டாவது திருமணத்தைச் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது கணவரின் சகோதரி கணவர் (நந்தொய்) தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதுகுறித்து கணவரிடம் முறையிட்டபோது அவர் தனக்கு ஆதரவாக செயல்படாமல் தன்னையே தாக்கியதாகவும் அந்தப் பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

   

இந்தச் சம்பவம் தொடர்பாக கான்பூர் சகேரி காவல் நிலையத்தில் கணவர், மாமியார் மற்றும் மாமனார் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 6-ம் தேதி இரு தரப்பினரிடையே சமரசப் பேச்சுவார்த்தை (Mediation) நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் பேச்சுவார்த்தை வரும் மே 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி கற்ற ஒரு பெண்ணிற்கே இந்த நிலை என்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.