“மணக்கோலத்தில் நின்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… மணமகனுக்கு வந்த ‘அந்த’ ஒரு வீடியோ!… பாதியில் நின்ற திருமணம்… சத்தர்பூரில் நடந்த பயங்கரம் சம்பவம்”…!!!

By Muthu Mani on வைகாசி 7, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், திருமண நாளன்றே மணமகளுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இளம்பெண் ஒருவரை அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை ரகசியமாக வீடியோவும் எடுத்துள்ளார். அந்த ஆபாச வீடியோவை வைத்து அப்பெண்ணை அந்த நபர் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து வந்ததோடு, பலமுறை கட்டாயப்படுத்தித் தவறான உறவில் ஈடுபடுத்தியுள்ளார்.

அந்தப் பெண்ணிற்கு வேறு ஒரு இடத்தில திருமணம் நிச்சயமாகி, மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலமாக வரவிருந்த நிலையில், அந்த நபர் தன்னிடம் இருந்த ஆபாச வீடியோவை மணமகனுக்கு அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகன், உடனடியாகத் திருமணத்தை நிறுத்திவிட்டுத் திருமணத்தில் இருந்து பின்வாங்கினார். ஆசையாகக் கைகளில் மருதாணி இட்டு, மணக்கோலத்தில் இருந்த அந்தப் பெண்ணின் கனவுகள் சிதைந்து, திருமணப் பந்தம் பாதியிலேயே முறிந்து போனது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

   

தற்போது அந்தப் பெண் கடி மல்ஹாரா காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு முறையிட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த ஆரம்பக் கட்டத்திலேயே அந்தப் பெண் தனது குடும்பத்தினரிடமோ அல்லது காவல்துறையினரிடமோ புகார் அளித்திருந்தால், இன்று இவ்வளவு பெரிய அவமானத்தையும், திருமண முறிவையும் தவிர்த்திருக்கலாம். பயந்து ஒதுங்குவது குற்றவாளிகளுக்குப் பலமாகிவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது. தற்போது நிர்வாகம் இந்தப் புகாரை ஏற்று உரிய விசாரணை நடத்தி வருகிறது.