வலது கையில் வலி.. இடது கையில் ஆபரேஷன்… இது மருத்துவமனையா இல்ல மரணக்கூடமா?… ஒரு மனிதனின் வாழ்க்கை கேள்விக்குறி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

By Rajeshwari on பங்குனி 29, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் பண்டரிபுரத்தில் உள்ள உப-மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோயாளி ஒருவருக்கு வலது கையில் இருந்த விரலில் கடுமையான வலி இருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தவறுதலாக அவரது இடது கையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இந்த வினோதமான மற்றும் ஆபத்தான மருத்துவக் குறைபாடு நோயாளியின் குடும்பத்தினரிடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

   

இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.