ஆந்திர மாநிலம் திருப்பதியில் பரா மெடிக்கல் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஸ்டைபண்ட் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி அலிபிரி பகுதியில் திரண்ட மாணவர்கள், அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த கிழக்குக் காவல் நிலையப் போலிஸார், போராட்டத்தைக் கலைக்க முயன்ற போது இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலிஸார் வரம்பு மீறிச் செயல்பட்டு, போராட்டம் நடத்திய பெண் மாணவிகளின் கூந்தலைப் பிடித்துக் கொடூரமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர்.
காவல் துறையினரின் இந்த அராஜக நடவடிக்கையால் அலிபிரி பகுதி முழுவதும் பெரும் பதற்றமும் அமைதியின்மையும் நிலவியது. இச்சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் AISF அமைப்பின் தலைவர்களைப் போலிஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். பெண் மாணவிகள் மீது போலிஸார் நடத்திய இந்தக் கொடூரத் தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…