திமுக மற்றும் அதிமுக இடையேயான ரகசிய கூட்டணி அல்லது உடன்பாடு குறித்துப் பரவும் தகவல்கள் குறித்து தாராபுரம் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. “கையெழுத்திட்ட மை காய்வதற்குள் கட்சி மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார்.
ஆனால், அதிமுகவில் நான் சந்தித்த கடுமையான அநீதிகளும் கொடுமைகளுமே அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்குக் முதன்மைக் காரணமாக அமைந்தன” என்று வேதனையுடன் தெரிவித்த அவர், கொள்கை முரண்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு எட்டப்படும் திமுக – அதிமுக இடையிலான எந்தவொரு கூட்டணி அல்லது உடன்பாட்டையும் உண்மையான, தியாக உணர்வுமிக்க அதிமுக தொண்டர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆவேசமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
