ஐயோ என்னை விட்டுடுடா… 85 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… ஈரோட்டில் பேரதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 17, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கரும்பாறை கிராமத்தில், வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி ஒருவர் இரவு நேரத்தில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அல்லது நபர்கள், தனியாக இருந்த அந்த மூதாட்டியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் ஆடைகள் கலைந்த நிலையில் மயங்கிக் கிடப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

இச்சம்பவம் குறித்து அந்தியூர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்றவாளியை விரைந்து பிடிக்க அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.