“சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… மளிகைக் கடைக்குச் சென்ற இடத்தில் நடந்த ஷாக்கிங் சம்பவம்… போக்சோவில் சிக்கிய கடைக்காரர்…!!”

By Swetha on ஆடி 5, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மளிகைக் கடை நடத்தி வரும் முருகன் (45) என்பவர், தின்பண்டம் வாங்க வந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியிடம் நைச்சியமாகப் பேசி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, அழுதுகொண்டே அங்கிருந்து தப்பி ஓடித் தன் தாயிடம் நடந்த விபரத்தைக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அன்றைய தினமே கடைக்காரர் முருகனிடம் நியாயம் கேட்கச் சென்றுள்ளார். ஆனால், முருகன் அப்போது கடுமையான மது போதையில் இருந்ததால், “காலையில் பார்த்துக் பேசிக் கொள்ளலாம்” என்று கூறி அங்கிருந்த ஊர் பொதுமக்கள் சிறுமியின் தாயைச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

   

மறுநாள் காலையில் சிறுமியின் தாய் மீண்டும் சென்று கேட்டபோது, முருகன் அவரைப் மிக ஆபாசமாகத் திட்டி மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட தாய், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.