“குழந்தையின் கால்களில் சிகரெட்டுகளால் சுட்டு, ஆணியை அடித்து” இஸ்ரேலியப் படைகளின் கொடூரம்… பாலஸ்தீனத்தில் மனிதநேயமற்ற செயல்..!!

Spread the love

பாலஸ்தீனத்தின் அல்-மகாரி (Al-Maghazi) எல்லைப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில், ஒன்னரை வயதுக் குழந்தையொன்று கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசாமா அபு நாசர் என்பவர் தனது 18 மாதக் குழந்தை கரீமுடன் எல்லையில் இருந்தபோது, இஸ்ரேலிய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அப்போது ஒரு குவாட்காப்டர் ட்ரோன் மூலம் மிரட்டப்பட்ட தந்தை, தனது குழந்தையைத் தரையிலேயே விட்டுவிட்டு சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அங்கேயே நிர்வாணப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தையின் முன்னிலையிலேயே அவரது கைக்குழந்தையைக் கொண்டு வந்த ராணுவத்தினர், சுமார் பத்து மணி நேரம் அக்குழந்தையைச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. சாட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின்படி, குழந்தையின் கால்களில் சிகரெட்டுகளால் சுட்டும், பாதத்தில் ஆணியை அடித்து இறக்கியும் மிகக் கொடூரமான முறையில் காயப்படுத்தியுள்ளனர். 10 மணி நேரத் துயரத்திற்குப் பிறகு, செஞ்சிலுவைச் சங்கத்தின் (Red Cross) தலையீட்டால் குழந்தை கரீம் மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

தற்போது குழந்தை கரீம் தனது குடும்பத்தினருடன் இருக்கும் நிலையில், தந்தை ஒசாமா அபு நாசர் இன்னும் இஸ்ரேலிய ராணுவத்தின் பிடியிலேயே உள்ளார். ஏற்கனவே மனநலச் சிகிச்சை பெற்று வந்த ஒசாமாவின் நிலை குறித்தும், அக்குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்தும் சர்வதேச நிறுவனங்கள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தந்தையை விடுவிக்கவும், இந்த மனித உரிமை மீறலுக்கு நீதி கிடைக்கவும் சர்வதேசத் தலையீட்டை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Soundarya

Recent Posts

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…

41 seconds ago

“கல்லறை மேலே தான் மாநகராட்சி அலுவலகம்… அட்டகாசம் செய்யும் பேய்கள்”… அமைச்சர் சஞ்சய் சிர்சாத் கிளப்பிய புது குண்டு.. அலறும் ஊழியர்கள்..!!!

மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…

2 minutes ago

“3000 கோடிக்கு சரக்கு.. படிக்கல, குடிக்கிறாங்க”… ஜி.கே.மணி யாருக்கு வலது கரம்?… மேடையிலேயே கல்லைத் தூக்கிக் காட்டி ஸ்டாலினை அதிரவைத்த அன்புமணி…!

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

4 minutes ago

விஜய்யின் வருகையால் யாருக்கு மரண அடி?… திராவிடக் கட்சிகளுக்கு ‘செக்’ வைத்த தளபதி: 50 ஆண்டுகால வரலாறு முடிவுக்கு வருகிறதா..?

தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…

9 minutes ago

மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் AI… ​”ஒரே ஒரு பட்டன்.. மொத்த ஏஐ-யும் க்ளோஸ்!”… உலகையே அதிரவைத்த டிரம்பின் ‘கில் சுவிட்ச்’ திட்டம்…!!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…

12 minutes ago

ரூ.4.8 கோடி வீரர் அவுட்…. சிஎஸ்கே-வுக்கு விழுந்த பலத்த அடி… பாதியிலேயே விலகிய நட்சத்திர வீரர்… கலக்கத்தில் ரசிகர்கள்..!

ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்று மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…

13 minutes ago