ஜோதிடர்கள் மற்றும் பிரபலங்கள்” என்ற சுவாரஸ்யமான தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. விஜய் தொலைக்காட்சியின் பிரபல ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் பாணியில் சமூகப் பிரச்சினைகளையும், சுவாரஸ்யமான தலைப்புகளையும் விவாதிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எப்பொழுதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், ஜோதிடர்களுக்கும் சின்னத்திரை பிரபலங்களுக்கும் இடையே நடந்த இந்த வார விவாதம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
https://www.instagram.com/reel/DY_ibvhlFB2/?utm_source=ig_web_copy_link
தனக்கு திருமணம் ஆனதை அறியாமல் ஜோதிடர் கூறிய கணிப்பைக் கேட்டு சற்றும் பதற்றமடையாத பரீனா, அதற்கு உடனே நகைச்சுவையாகவும் சமயோசிதமாகவும் பதிலடி கொடுத்தார். ஜோதிடரின் இந்தத் தவறான கணிப்பும், அதற்கு பரீனா கொடுத்த சுவாரஸ்யமான பதிலும் அடங்கிய நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி கவனம் ஈர்த்து வருகிறது.
