“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், மதிமுகவின் வசம் உள்ள இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தவெக தரப்பில் தன்னிடம் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போதைய சூழலில் அதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை என்பதைத் தான் தவெக தரப்பிற்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் வைகோ கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தன்னிடம் அளித்த உறுதிமொழி குறித்தும் வைகோ வெளிப்படுத்தியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யக் கோரியபோது, “அந்த இரண்டு மதிமுக உறுப்பினர்களையும் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்து, அவர்களை மீண்டும் வெற்றி பெறச் செய்வது என்னுடைய முழுப் பொறுப்பு” என்று விஜய் தன்னிடம் உறுதியளித்ததாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள தற்போதைய அரசியல் சூழலில், வைகோவின் இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.