பாலிவுட்டில் நடிகை ராதிகா ஆப்தே முன்னணி நடிகையாக உள்ளார். ஆனால் அவர் இந்தி படங்கள் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் நடிகர் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்திலும் ரஜினிகாந்துடன் கபாலி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் அவர் சில படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய சினிமா குறித்து அதிர்ச்சியான புகார் ஒன்றை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது, நான் பணத்திற்காக தான் தென்னிந்திய படங்களில் நடித்தேன். அங்கு செட்டில் இருப்பதே எனக்கு ரொம்ப கடினம்.
எனக்கு நன்றாக அது நினைவிருக்கிறது. ஒரு படத்தின் சூட்டிங்கில் நான் மட்டுமே பெண். சுற்றி இருக்கும் மற்ற எல்லோரும் ஆண்கள். அவர்கள் என்னுடைய மார்பகம் மற்றும் பின்புறம் பாடிங் வைத்து பெரிதாக மாற்றச் சொன்னார்கள்.
இன்னும் எவ்வளவுதான் வைப்பது என்று நான் கோபமாக அவர்களிடம் கேட்டேன். எனக்கு மேனேஜர் இல்லை ஏஜென்ட் இல்லை எனக்கென தனி டீம் வரக்கூடாது எனவும் அவர்கள் கண்டிஷன் போட்டார்கள் என்று ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
