வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டிக்கு வாய்ஸ் கொடுத்தது இந்த நடிகை தானா?.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. வைரல் வீடியோ..!!

By Nanthini on ஆவணி 11, 2023

Spread the love

தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருந்த நிலையில் சூரி மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்த நிலையில் அவருடைய பாடல்கள் அனைத்தும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது.

   

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றும் இந்த திரைப்படம் பல சேனல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யா பள்ளி படிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். அதில் அவருக்கு வாய்ஸ் கொடுத்தது பிரபல சீரியல் நடிகை ஆன ஹாசினி.

   

 

ஆரம்பத்தில் ரேடியோ ஆர்ஜேவாக பணியாற்றிய இவ்வாறு பத்து வருடங்களுக்கு மேடாக ஆர்ஜேவாக இருந்தவர். தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ திவ்யாவுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் வாய்ஸ் கொடுத்த இவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.youtube.com/shorts/iIXAbUV7Bi8?feature=share