நான் என் படத்தில் காட்டிய இந்த 3 கேரக்டருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு… ரகசியத்தை பகிர்ந்த மணிரத்னம்…

By admin on தை 26, 2025

Spread the love

மணிரத்னம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற இயக்குனர் ஆவார். இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பு திரைக்கதை என பன்முகங்களைக் கொண்டவர். இவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று அனைத்து நடிகர்களும் விரும்புவர். அப்படி ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு பணத்தை இயக்குபவர் மணிரத்னம்.

   

1980, 90களில் கே பாலச்சந்தர் பாலுமகேந்திரா வரிசையில் மணிரத்னம் தனது தத்துவமான மாறுபட்ட கதையம்சம் கொண்ட காதல் தீவிரவாதம் நாட்டின் நிலவரம் நடுத்தர மக்களின் நிலைப்பாடு போன்ற கதைகளுடன் மக்களுக்கு புரியும் வகையில் படங்களை எடுப்பார் மணிரத்னம்.

   

இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் சுருக்கமான வசனங்களுக்கும் பெயர் பெற்றது ஆகும். மணிரத்னம் யாரிடமே உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக பல்லவி அனுப்பல்லவி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1986 ஆம் ஆண்டு இவர் இயக்கிய மௌனராகம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து நாயகன், ரோஜா, பம்பாய், உயிரே, அலைபாயுதே என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம்.

 

வரது படங்களில் பெண்களின் கதாபாத்திரம் என்பது மிகவும் ஸ்ட்ராங்காகவும் தனித்துவமான தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இவர் தன்னுடைய படங்களில் வந்த 3 கதாபாத்திரங்களை பற்றி முக்கியமாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.

மணிரத்னம் கூறியது என்னவென்றால் என்னுடைய படங்களில் மௌனராகம் படத்தில் வந்த ரேவதி, அலைபாயுதே படத்தில் வந்த ஷாலினி, ஓ காதல் கண்மணி படத்திலிருந்து நித்யா மேனன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்கும் ஒற்றுமை இருக்கும். அதாவது இந்த மூன்று பெண்மணிகளும் கடினமான ஒரு சூழ்நிலையில் தனி முடிவுகள் எடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்தந்த காலகட்டத்து சொசைட்டிக்கு தகுந்ததாக நான் இவர்களை காட்டியிருக்கிறேன் என்று ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார் மணிரத்னம்.