இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பதக் என்ற பயனர் பகிர்ந்துள்ள அவரது தாயாரின் நெஞ்சை உருக்கும் ஆடியோ செய்தி ஒன்று, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி ஒட்டுமொத்த இணையவாசிகளின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது. வேலை மற்றும் படிப்பிற்காகத் தங்களது சொந்த வீட்டை விட்டு, தூரத்து நகரங்களில் தனியாக வசித்து வரும் இளைஞர்களின் இதயங்களை இந்த ஆடியோ பதிவு வெகுவாகத் தொட்டுள்ளது. ஒரு நீண்ட சோர்வான நாளுக்குப் பிறகு, தங்களது தாயின் குரலைக் கேட்க ஏங்கும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த ஆடியோ பதிவு தங்களின் சொந்தத் தாயின் குரலாகவே ஒலித்து, இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வைரலாகி வரும் அந்த ஆடியோ பதிவில், ஷாலினியின் தாய் அவளைப் பாசத்துடன் ‘லாடோ’ என்று அழைத்து மிகவும் அமைதியாக அவளது நலம் விசாரிக்கிறார். மேலும், “உன் உணர்ச்சிகளை ஒருபோதும் உள்ளுக்குள் அடக்கி வைக்காதே; வாழ்க்கையில் எப்போதெல்லாம் உனக்குச் சிக்கல் வருகிறதோ, அப்போதெல்லாம் நண்பர்களிடமோ அல்லது அன்பானவர்களிடமோ வெளிப்படையாகப் பேசு. எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது உன் மனச்சுமையைக் குறைக்கும்; வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் நீ தனியாகச் சந்திக்கத் தேவையில்லை, நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்” என்று அந்தத் தாய் உருக உருகப் பேசியுள்ளார்.
அன்று இரவு தனது கைபேசி சைலண்ட் மோடில் (Silent mode) இருந்ததால், அந்த நேரத்தில் தனது தாயின் செய்தியைப் பார்க்கவில்லை என்றும், மறுநாள் காலை அந்தக் குரல் பதிவைக் கேட்டபோது தனது இதயம் துக்கத்தால் நிரம்பியது என்றும் ஷாலினி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “இப்படிப்பட்ட ஒரு தாயைப் பெறுவதற்கு, எனது முந்தைய பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை” என்று அவர் பதிவிட்டிருந்தார். இந்த ஆடியோவைக் கேட்ட இணையவாசிகள், “அந்தக் குரலைக் கேட்கும்போது ஒரு தாய் என்னைக் கட்டிப்பிடிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்றும், “உலகில் தாயைப் போல் அன்பு காட்ட யாரும் இல்லை, உங்களுக்கு ஒரு தாய் இருந்தால் வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றையும் வென்றுவிட்டீர்கள்” என்றும் தங்களது உணர்வுகளைக் கமெண்ட்டுகளில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…
வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…