“பெத்த 4 பிள்ளைகளும் சுடுகாட்டிற்கு போயிட்டாங்க”… 5-வது மகனுக்காக கதறும் தாய்… ஒரு குடும்பத்தையே அழித்த அந்த ‘வெள்ளை’ அரக்கன்.. யாரும் எதிர்பார்க்காத கொடூரம்…!!!

By Rajeshwari on சித்திரை 6, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் லோதி பகுதியில், போதைப்பொருள் அரக்கனால் ஒரு தாய் தனது நான்கு மகன்களையும் பறிகொடுத்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்தோஷ் குமாரி என்ற அந்த முதியவர், ‘சிட்டா’ எனப்படும் கொடிய போதைப்பொருள் பழக்கத்தால் அடுத்தடுத்து தனது நான்கு வாரிசுகளை இழந்து தவிக்கிறார்.

தற்போது அவரது ஐந்தாவது மகனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுக்கையில் கிடக்க, உணவளிக்கக் கூட யாரும் இல்லாத நிலையில் அந்தத் தாய் கண்ணீரில் மூழ்கியுள்ளார். இது ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் சோகம் மட்டுமல்ல, பஞ்சாப்பின் பல வீடுகளில் போதைப்பொருள் ஊடுருவி இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்து வருவதன் கசப்பான அடையாளமாக உள்ளது.

   

இவ்வளவு பெரிய துயரம் ஒருபுறம் இருக்க, அப்பகுதி மக்கள் காவல்துறையின் மெத்தனப்போக்கு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சுல்தான்பூர் லோதி காவல் நிலையத்திற்கு அருகிலேயே போதைப்பொருள் விற்பனை தடையின்றி நடப்பதாகக் குற்றம் சாட்டும் மக்கள், இது தொடர்பாகப் புகார் அளித்தால் பொதுமக்களையே போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிக்குமாறு காவல்துறை அலட்சியமாகப் பதிலளிப்பதாகக் கூறுகின்றனர்.

   

இந்நிலையில் போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவோம் என்ற அரசின் வாக்குறுதிகள் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. அடுத்த தலைமுறை குழந்தைகளையாவது இந்த நச்சுச் சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கதறலாக உள்ளது.