தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் சங்கீதா பெரும் உறுதுணையாக இருந்து வந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித சலசலப்பும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில், சமீபத்திய வருடங்களாக சில மனக்கசப்புகள் ஏற்பட்டு, அது விவாகரத்து கோரும் அளவிற்கு குடும்பத்தில் பெரிய விரிசலை உருவாக்கியது.
இந்த கருத்து வேறுபாட்டிற்கு முக்கியக் காரணமாக, திரைத்துறையைச் சேர்ந்த மூன்றாம் நபர் ஒருவருடனான தொடர்பு சொல்லப்பட்டது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மனுவில், விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே தன்னிடம் உணர்வுப்பூர்வமாக விலகி இருப்பதாகவும், மற்றொரு பிரபல நடிகையுடன் அவருக்கு நெருக்கம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், இதனைத் தட்டிக்கேட்டதால் தனது சுதந்திரமும் பொருளாதாரமும் முடக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, அந்த குறிப்பிட்ட நடிகை த்ரிஷாவாக இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதோடு, பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டதும் இந்த வதந்திகளை மேலும் வலுவாக்கியது.
இந்தச் சூழலில், நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கை சங்கீதா தரப்பு திடீரென திரும்பப் பெற்றதாக வெளியான செய்தி, இருவருக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதோ என ரசிகர்களுக்கு சற்று ஆறுதலைத் தந்தது. சமீபத்தில் நடந்த விஜய்யின் கட்சி கொடியேற்று விழாவில் சங்கீதா கலந்துகொண்டு இருவரும் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு த்ரிஷா வருகை தந்தது பலரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில், திருமண முடிவான உடனேயே சங்கீதாமீது தனக்கு காதல் மலர்ந்துவிட்டதாக விஜய் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
