மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2021-ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் செய்துகொண்டதாகக் கூறி விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை அணுகினார். தனது வாதத்திற்கு ஆதாரமாக கணவர், அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் இருக்கும் புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த புகைப்படங்களைச் சான்றாக ஏற்றுக்கொண்ட குடும்ப நீதிமன்றம், கணவர் இரண்டாவது திருமணம் செய்தது உண்மைதான் என நம்பி அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கித் தீர்ப்பளித்தது.
இருப்பினும், சமீபத்தில் விவாகரத்துத் தீர்ப்பு வெளியான பின்னரே, தனது மனைவி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த புகைப்படங்கள் குறித்து கணவருக்குத் தெரியவந்தது. அந்த புகைப்படத்தில் தனது சகோதரியுடன் இருக்கும் காட்சியைத் தவறாகச் சித்தரித்து, அவர் தனது இரண்டாவது மனைவி என மனைவி பொய் புகார் அளித்திருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு மாறானது என்றும், நீதிமன்றம் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, தனது மனைவி போலி ஆதாரங்களை உருவாக்கி நீதிமன்றத்தை ஏமாற்றி விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறி, அந்த நபர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். குடும்ப உறுப்பினர்களுடன் சாதாரணமான எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்துத் தவறான சித்திரத்தை உருவாக்கித் தீர்ப்பு பெறப்பட்டுள்ளதால், அந்த விவாகரத்துத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அவர் மனுவில் கோரியுள்ளார். இந்த வினோதமான வழக்கு தற்போது சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…