ஏடிஎம் மெஷினில் இருந்த ‘அந்த’ ஒரு நம்பர்.. கால் செய்த நபருக்கு நேர்ந்த கொடூரம்.. கொள்ளையர்கள் போட்ட புதிய ‘ஸ்கெட்ச்’.. HDFC ஏடிஎம்மில் நூதன கொள்ளை..!!

Spread the love

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சகுனா மோர் பகுதியில் உள்ள எச்டிஎப்சி (HDFC) ஏடிஎம் மையத்தில் அதிர்ச்சியூட்டும் மாபெரும் பண மோசடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் எடுக்க வேண்டிய தொகை மற்றும் ரகசிய குறியீட்டு எண் (PIN) ஆகியவற்றை உள்ளிட்ட போதிலும், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வராமல் உள்ளேயே சிக்கிக் கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த அவர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபோது, அந்த ஏடிஎம் இயந்திரத்தின் மீது ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்த உதவி எண்ணை கவனித்துள்ளார்.

வங்கியின் அதிகாரப்பூர்வ உதவி எண் என்று நம்பி, இயந்திரத்தில் எழுதப்பட்டிருந்த அந்த எண்ணிற்கு அவர் அவசர அவசரமாக உதவி கேட்டு அழைத்துள்ளார். ஆனால், மறுமுனையில் பேசிய மர்ம நபர்கள் கொடுத்த வழிகாட்டுதலைப் பின்பற்றிய அடுத்த சில நிமிடங்களிலேயே, அவரது வங்கி கணக்கில் இருந்த ஒட்டுமொத்தப் பணமும் அடியோடு சுருட்டப்பட்டு காணாமல் போனது. தனது வாழ்நாள் சேமிப்பை ஏமாந்த துக்கத்தில் அந்த நபர் ஏடிஎம் மையத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். அங்கிருந்த ஏடிஎம் காவலாளியிடம் விசாரித்தபோது, அந்த மோசடி எண் எப்போது, யாரால் எழுதப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். ஏடிஎம் மையங்களுக்குச் செல்வோர் இதுபோன்ற போலியான எண்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

Muthu Mani

Recent Posts

BREAKING: “அதிமுக ஒன்றிணைய வேண்டி” அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி..!!

தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளரான மகேந்திரன், "அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும்" என்று உருக்கமாகக்…

3 seconds ago

உஷார்..! காரில் IPL மேட்ச் பார்த்துக்கொண்டே சென்ற இளைஞர்… எமன் போல காத்திருந்த கிணறு… நொடியில் பறிபோன உயிர்..!!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மொராபெல்லி அருகே காரில் சென்றுகொண்டே மொபைலில் ஐபிஎல் இறுதிப்போட்டியைப் பார்த்ததால் நேரிட்ட விபத்தில் வாலிபர்…

4 minutes ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. “இனி கலப்படம் இருக்காது” சீல் வைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்.. CM விஜய் மாஸ் பிளான்..!!

தமிழக நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகளில்) இனிமேல் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் திறந்த மூட்டைகளாக…

8 minutes ago

காட்பாடி அதிர்ச்சித் தோல்வி… பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்..? குலுங்கும் திமுக..!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சியால் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில்,…

11 minutes ago

சாலையில் இப்படியா விளையாடுவது..? நண்பன் தடுத்தும் கேட்காமல்.. பேருந்து முன் பாய்ந்த இளைஞர்.. நொடிப் பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி…!

சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வைரல் வீடியோவில், அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பேருந்தை நடுரோட்டில் நின்று கொண்டு…

25 minutes ago

“இனிமேல் ரோலர் கோஸ்டர் பக்கமே போக மாட்டாங்க..! காற்றில் தொங்கியபடி துடித்த மாணவர்கள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!”

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்வெஸ்டன் பிளஷர் பியர் பொழுதுபோக்கு பூங்காவில், மே 28 அன்று ஒரு அதிர்ச்சிகரமான விபத்து…

31 minutes ago