திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உரிய தகுதியின்றி போலி மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், மாவட்ட சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பாரதி தலைமையில், நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் அஜாம் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் நத்தம் மற்றும் செந்துறை பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது, செந்துறை பேருந்து நிலையப் பகுதியில் கிளினிக் வைத்து ஒருவர் சட்டவிரோதமாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், மருத்துவம் பார்த்து வந்தவர் பாப்பாத்தி (55) என்பதும், அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. எவ்வித மருத்துவப் படிப்பும் படிக்காமல் பொதுமக்களின் உயிரோடு விளையாடி வந்த அந்தப் போலி பெண் மருத்துவரைப் பிடித்து அதிகாரிகள் உடனடியாக நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நத்தம் காவல்துறையினர் பாப்பாத்தியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் பல போலி மருத்துவர்கள் நடமாட்டம் இருப்பதாகத் தெரிவிக்கும் அப்பகுதி பொதுமக்கள், மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு நத்தம் முழுவதும் இயங்கி வரும் அனைத்து தனியார் கிளினிக்குகளிலும் சுகாதாரத் துறையினர் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…
சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…