திமுகவா?… தவெகவா?… எது கெத்து?… அன்பில், நேரு வழக்குகள் குறித்து… வன்னி அரசு சொன்ன அந்த ஒரு வார்த்தை…!

By Swetha on கார்த்திகை 2, 2026

Spread the love

மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் முந்தைய திமுக ஆட்சியை விட தவெக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட வன்னி அரசு, தமிழக முதல்வர் விஜய் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் மாநிலத்திற்குக் தனிக்கொடி போன்ற விவகாரங்களில் துணிச்சலான நிலைப்பாடுகளை எடுப்பதாகத் தெரிவித்தார். மேலும், தவெகவின் சிறப்பான செயல்பாடுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவதூறுகளைப் பரப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களான அன்பில் மகேஷ் மற்றும் கே.என். நேரு மீதாான ஊழல் மற்றும் சட்டப் புகார்கள் குறித்துப் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் அவர்கள் மீது பாயும் வழக்குகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லை என்று தெளிவுபடுத்தினார். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் சூழலில், இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளும் வழக்குகளும் வழக்கமான சட்டப்படிதான் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றார்.

   

தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சிகளுக்கு இடையேயான மோதல்கள் குறித்துப் பேசிய வன்னி அரசு, அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காகவும், தவெக மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவுமே இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் குற்றம்சாட்டினார். மக்களிடையே தவெக மீதுள்ள நற்பெயரைக் குலைக்கச் சில எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இதுபோன்ற வதறல்களைப் பரப்புவதாகவும் அவர் தமது பேட்டியில் விளக்கமளித்தார்.