“என் தம்பி சாகல.. அவனுக்கு ஒன்னும் ஆகல!”.. அப்பாவைப் பார்த்துட்டு வந்த தம்பிக்கு நேர்ந்த கொடூரம்.. நெடுஞ்சாலையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் கூடப்பட்டு பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர் சென்னையில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவருடைய பிள்ளைகளான அனுஷ்கா (18), கனிஷ்கா (16) மற்றும் மௌனிஷ் (11) ஆகிய மூவரும் பள்ளி விடுமுறைக்காகச் சென்னையில் உள்ள தங்களது தந்தையைப் பார்க்கச் சென்றுள்ளனர். ஊரில் திருவிழா என்பதால், பிள்ளைகள் மூவரையும் சந்துரு ரயிலில் ஜோலார்பேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்களை அழைத்து வருவதற்காக இவர்களின் தாத்தா பெருமாள் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்குச் சென்று, மூன்று பிள்ளைகளையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், வாணியம்பாடியில் உள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக அளவுக்கு அதிகமாக மது போதையில் அதிவேகமாகக் காரை ஓட்டி வந்துள்ளான். ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே பெருமாள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வண்டியில் இருந்த தாத்தா பெருமாள் மற்றும் மூன்று பிள்ளைகளும் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் மௌனிஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பள்ளி விடுமுறையில் தந்தையைப் பார்த்துவிட்டுத் திரும்பிய தம்பி உயிரிழந்ததை அறிந்த அக்காக்களும், தாத்தாவும் மருத்துவமனையில் கத்தி கதறி அழுதனர். இந்தத் தகவலை அறிந்து மருத்துவமனைக்கு ஓடிவந்த உறவினர்களின் கதறல் சத்தம் காண்போர் நெஞ்சைக் கண்கலங்கச் செய்தது. இதற்கிடையே, கார் மோதி நான்கு பேரும் தூக்கி எறியப்படும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

17 seconds ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

2 minutes ago

பகீர்… வீட்டு வாசலில் விளையாடிய 4 வயது சிறுமி மாயம்… 45 நிமிடத்தில் போலீஸ் செய்த அதிரடி… ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…

10 minutes ago

சீனியர் vs ஜூனியர்!… முகமூடி கும்பலின் அட்டகாசம்… மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்… பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தக் களரி…!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…

11 minutes ago

மனசாட்சியே இல்லையா?… சந்தேகத்தால் வெடித்த விபரீதம்… மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…

23 minutes ago