‘என்றும் அழியாத காதல்…’ “இறந்து எட்டு வருஷம் ஆச்சு…” ஆனா அவ என் கூடத்தான் இருக்க… முதியவரின் நெகிழ்ச்சி செயல்… சிக்னலில் கண்ட காட்சி… உறைந்து போன இணையவாசி…!

By Visaka on ஆடி 21, 2026

Spread the love

பெங்களூரு நகரின் இந்திராகர் போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர், தனது ஆட்டோவில் வைத்திருக்கும் புகைப்படங்களுக்கு மிக அன்போடு மலர்களை அடுக்கிக் கொண்டிருந்தார். ஆசிஷ் மேத்யூ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இதைக் கண்டு வியந்து விசாரித்தபோது, அந்த முதியவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தன் மனைவியின் புகைப்படங்களைத்தான் தினமும் காலையில் இவ்வாறு பூக்களால் அலங்கரிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனக்கு மகனும், மருமகளும், ஆறு பேரக்குழந்தைகளும் இருந்தாலும், மனைவியின் நினைவுகள் எப்போதும் தன் ஆருயிர் துணையாகவே இருப்பதாகவும், வீட்டில் சும்மா இருந்தால் மனைவியின் நினைவுகள் வாட்டுவதால், புதிய மனிதர்களிடம் பேசித் தன் துயரத்தைப் போக்கவே இன்றும் ஆட்டோ ஓட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://www.instagram.com/reel/DaLTCOuJaWn/?utm_source=ig_embed&ig_rid=AfGq1Otl-9c7-PSY12TCrMA

   

மனதை உருக்கும் இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. இணையவாசிகள் பலர், “பணத்தால் வாங்க முடியாத உண்மையான அன்பு இதுதான்”, “ஒரு மனிதன் நம்மை இப்படி நேசிக்கவும், நினைவில் வைத்திருக்கவும் வேண்டும்” என்றும், “கவிதைகளில் மட்டுமே எழுதப்படும் அன்பின் வடிவம் இது” என்றும் நெகிழ்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். காலங்கள் கடந்தாலும் மரணத்தைக் கடந்து வாழும் இந்த முதியவரின் மாறாத காதல், மனித நேயத்திற்கும் உண்மையான அன்பிற்கும் சான்றாக விளங்கி அனைவரையும் உருக வைத்துள்ளது.