“அடேங்கப்பா!.. மனித தலையை விடப் பெரிய வாய்.. மூச்சே நின்றுவிட்டது”.. மீனவர் வலையில் சிக்கிய ‘அந்த’ பிரம்மாண்ட உயிரினம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

By Muthu Mani on ஆனி 15, 2026

Spread the love

அமேசான் மழைக்காடுகளின் ஆற்றுப் பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில், மனிதத் தலையை விடப் பெரிய தலையைக் கொண்ட பிரம்மாண்டமான பச்சை அனகோண்டா பாம்பு ஒன்று சிக்கிய காணொளி சமூக வலைதளங்களில் பலரையும் வியர்க்க வைக்கும் வகையில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், சிறிய படகில் இருக்கும் மீனவர் ஒருவர் அந்தப் பயங்கரமான பாம்பைத் தன் கைகளில் தூக்க முடியாமல் திணறுவதும், ஒரே நேரத்தில் பலரை விழுங்கும் அளவுக்கு அது பெரியது எனக் கூறுவதும் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, வலையில் சிக்கியபோதே அந்த அனகோண்டா உயிரிழந்திருந்ததால் மீனவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஒருவேளை அது உயிரோடு இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது” என அமேசான் ஆற்றின் நடுக்கமூட்டும் ஆபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

https://www.instagram.com/reel/DZh4-awu_UT/?utm_source=ig_embed&ig_rid=6ee90b4b-851f-40a0-a5be-5c93bffbb037

   

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட பாம்பினமான இந்த பச்சை அனகோண்டாக்கள் 30 அடி நீளம் வரையும், 250 கிலோவுக்கும் அதிகமான எடையும் வளரக்கூடியவை. நிலத்தில் மெதுவாக நகர்ந்தாலும், நீரிற்குள் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நீந்தும் ஆற்றல் கொண்ட இவை, மற்ற பாம்புகளைப் போல் முட்டையிடாமல் ஒரே நேரத்தில் 20 முதல் 100 குட்டிகள் வரை ஈனக்கூடிய தனித்துவமான பண்பைக் கொண்டவை ஆகும். மேலும், பெண் அனகோண்டாக்கள் இனப்பெருக்கத்திற்குப் பிறகு கர்ப்ப கால ஊட்டச்சத்துக்காக ஆண் அனகோண்டாவையே விழுங்கும் விசித்திரமான பழக்கத்தைக் கொண்டுள்ளன. மனிதர்களை இவை தாக்குவது மிகவும் அரிதான ஒன்று என்றாலும், தங்களின் பிரம்மாண்ட உடலமைப்பால் மனிதர்களை முழுமையாக விழுங்கும் திறன் கொண்ட இந்த அனகோண்டாவின் வைரல் காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.