தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக, முதல்முறையாக ஒரு கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் ஏற்கனவே முதலமைச்சரும் 9 அமைச்சர்களும் பதவியேற்றிருந்த நிலையில், தற்போது மேலும் 23 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இந்த புதிய அரசியல் நகர்வு மற்றும் அமைச்சரவை உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள சவால்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த அமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேசிய தராசு ஷ்யாம், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும், இதனை ஒட்டுமொத்தமாக ஒரு தவெக அமைச்சரவையாகவே பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த பட்டியலில் இடமளிக்கப்படவில்லை. அதேநேரம், இந்த புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களைத் தோற்கடித்தவர்களுக்கும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது தெளிவாகப் புலனாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெகவிற்குத் தனிப் பெரும்பான்மை இல்லாததால் இது ஒரு செயற்கையான பெரும்பான்மையைக் கொண்ட கூட்டணி அரசு என்பதை நினைவூட்டினார். திமுக கூட்டணியிலிருந்து, அதன் வாக்கு வங்கியால் வெற்றி பெற்றுப் பின் தவெகவிற்கு ஆதரவளிப்பவர்களால்தான் இந்த ஆட்சி சாத்தியமாகியுள்ளது. மேலும், இந்த அமைச்சரவையில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் போன்ற அதிமுக பின்னணி கொண்ட முகங்கள் இடம் பெற்றிருப்பதால், இது பார்ப்பதற்கு அப்படியே ஒரு அதிமுக அமைச்சரவை போன்ற தோற்றத்தையே தருகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
1967ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகம் காணும் இந்த முதல் கூட்டணி அரசுக்கு எதிர்காலத்தில் பல்வேறு சவால்கள் காத்திருப்பதாக தராசு ஷ்யாம் எச்சரிக்கிறார். குறிப்பாக, உட்கட்சிப் பூசலுக்குப் பெயர் போன காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அரவணைத்துச் செல்வதில் தவெகவிற்குச் சிக்கல்கள் எழலாம். 1977-ல் தேசிய அளவில் ஜனதா கட்சி கூட்டணி அரசு தோல்வியுற்றதால் மக்கள் மீண்டும் இந்திரா காந்தியைத் தேர்ந்தெடுத்த வரலாற்றைக் குறிப்பிட்ட அவர், இந்த அரசு வெற்றிகரமாகச் செயல்படத் தவறினால் கூட்டணி ஆட்சி முறையின் மீதே மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றார். மேலும், அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து கொறடா உத்தரவை மீறி ஆதரவளித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதால், அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே திரும்ப அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர்…
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…
10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…
பாஜகவின் தேசிய தலைமை, நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை நியமித்து…
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…