Categories: CINEMA

சினிமாக் காரர்களைக் கூத்தாடிகள் எனத் திட்டிய பெரியார் NSK-வை இப்படி புகழ்ந்திருக்கிறாரே… ஓ இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புக்ழ் பெற்றார்.

முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். சினிமாவுக்குள் நுழைந்த போதும் அவரும் அவர் மனைவி மதுரமும் இணைந்து முற்போக்கு மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை தங்கள் நகைச்சுவை மூலம் பேசிவந்தனர்.

அரசியல் தளத்தில் தீவிரமாக இயங்கி வந்த பெரியார், சினிமாவையும் சினிமாக் காரர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர்களைக் கூத்தாடி என்று அழைத்து அவர்களால்தான் மக்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கிறார்கள் என்று திட்டித் தீர்த்தார். அப்படி பட்ட பெரியாரே என் எஸ் கே அவர்களைப் பாராட்டி தன்னுடைய குடி அரசு பத்திரிக்கையில் எழுதியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அதற்குக் காரணம் கலைவாணர் தொடர்ந்து முற்போக்கான விஷயங்களைப் பேசி வந்ததுதான்.

ஆம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு வெளியான குடியரசு பத்திரிக்கையில் “கல்லடியும் சொல்லடியும் பட்டு மூன்று மணிநேரம் தொண்டைகிழியப் பேசியும் எவ்வளவு பேர் என் கருத்தை ஏற்றார்கள் எனத் தெரியாமல் போகிறது. அதையே என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் சொல்கிறார். மக்கள் காசு கொடுத்துச் சினிமா பார்த்து மகிழ்ச்சியாக இந்தக் கருத்துகளையெல்லாம் நன்கு தெரிந்து கொள்கிறார்கள். நான் நூறு கூட்டங்களுக்குப் போய் செய்யக் கூடியதை என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தின் மூலம் சாதித்து விடுகிறார்!

இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத்துறையிலும், கலைத்துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார்.

கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி ‘அன்னக் காவடி கிருஷ்ணன்’ ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்! ” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

10 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

1 மணி நேரம் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

2 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

4 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

5 மணி நேரங்கள் ago