வேலுமணி அணிக்கு பேரதிர்ச்சி… திடீரென EPS பக்கம் மாறிய தங்கமணி… பின்னணியில் நடந்த ரகசிய டீல்?… வெளிவந்த உள்கட்சி ரகசியம்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இபிஎஸ்-ன் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர். எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளை இபிஎஸ் பறித்த நிலையிலும், அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் மாநில அளவிலான புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், இந்த புதிய பொறுப்புகளை ஏற்க மறுத்த வேலுமணி அணியினர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர்.

இந்தச் சூழலில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி மற்றும் கே.பி. அன்பழகன் போன்ற மூத்த தலைவர்கள், தங்களது சொந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் வேண்டுமென்றே வேறு மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களாக மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனை எதிர்த்து வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களின் விசுவாசிகளை புறக்கணிக்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளதாகவும், போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தாலும் சொந்த மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களுக்குச் சென்று பங்கேற்க இயலாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இருப்பினும், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் முன்னாள் செயலாளரான தங்கமணி, சேலத்தில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நேரில் கலந்துகொண்டார். அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை வெகுவாகப் பாராட்டிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. வேலுமணி அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த தங்கமணி, திடீரென எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறியது அதிமுக உள்கட்சி அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.

தங்கமணி திடீரென நிலையை மாற்றிக் கொண்டதன் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் பேசப்படுகின்றன. எடப்பாடிக்கு எதிராகச் செயல்படும் வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் போன்றோர் தற்சமயம் எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் நிலையில், தங்கமணி தற்போது எம்.எல்.ஏ-வாக இல்லை. இதனால் மற்ற தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம் பிடிக்கத் திட்டமிட்டாலும், அது தங்கமணிக்கு எந்தப் பலனையும் தராது எனக் கருதப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியும் தங்கமணியும் நெருங்கிய சம்பந்தி உறவுமுறையைக் கொண்டவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே சுமுகமான சமாதானம் ஏற்பட்டு, மீண்டும் இபிஎஸ் பக்கம் தங்கமணி இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“47-ல் 6 போச்சு.. இப்போ 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம்?”….. எடப்பாடி தலையில் இடியை இறங்கிய செங்கோட்டையன்…. பரபரப்பு பேட்டி….!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…

3 minutes ago

“1 வாரம்தான் டைம்…. அதுக்குள்ள இத பண்ணனும் இல்லனா?”…. முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் விதித்த கெடு… பற்றி எரியும் தமிழக அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…

9 minutes ago

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

39 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

47 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

55 minutes ago

“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…

57 minutes ago