பிரபல இயக்குனரான பாலா முன்னணி நடிகரான விக்ரமின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை கொண்டு வந்தவர். நடிகர் விக்ரம் பாலா இயக்கத்தில் உருவான சேது திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் திரைப்படத்திலும் விக்ரம் நடித்தார்.

இந்த படத்திற்காக விக்ரமுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு பாலாவுடன் இணைந்து விக்ரம் வேலை பார்க்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விக்ரம் தனது மகனை பாலாவின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த ஆசைப்பட்டார். அதன்படி வர்மா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தின் ஷூட்டிங்கை விக்ரம் பார்த்துள்ளார்.

அதில் அவருக்கு திருப்தி இல்லாததால் அந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. பின்னர் வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் படத்தை ரீமேக் செய்தனர். இதனால் விக்ரம் பாலா உறவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். முதலில் இந்த படத்தில் சூர்யா தான் நடிக்க கமிட்டானார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகி விட்டதால் படத்தில் அருண் விஜய் நடித்தார்.

இதே போல பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி 2 படங்களும் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிகிறது. பான் இந்தியா படமான புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தள்ளி போகிறது. இதனால் விக்ரமின் தங்கலான் அருண் விஜயின் வணங்கான் ஆகிய படங்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
