Connect with us

ம்ம்ம்ம்.. ஆஸ்கார் அவார்ட் அடிச்சிரும் போலேயே… மிரட்டலாக வெளிவந்த விக்ரமின் தங்கலான் பட டீசர்..

CINEMA

ம்ம்ம்ம்.. ஆஸ்கார் அவார்ட் அடிச்சிரும் போலேயே… மிரட்டலாக வெளிவந்த விக்ரமின் தங்கலான் பட டீசர்..

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தங்கலான். வரலாற்று பின்னணியுடன் அதிக பட்ஜெட்டில் உருவான தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

   

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜநாகத்தின் கழுத்தை லாவகமாக திருப்பி உடல் வேறு, தலை வேறாக விக்ரம் பிரித்து எடுப்பதுடன் டீசர் தொடங்கி யுத்தம் ஆரம்பிக்கிறது. ரத்தமும் யுத்தமும் கலந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை டீசரில் காட்டப்பட்டு, கரிய நிறமும் ஜடாமுடியுடன் இருக்கும் தோற்றத்தில் விக்ரம் அசத்தியுள்ளார்.

புதிய கெட்டப்பில் மாளவிகா மோகனன் தோன்றுகிறார். டீசருக்கு நடுவே விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. டீசரை பார்த்த பலரும் விக்ரமின் நடிப்பை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். பாலாவின் பரதேசி படத்தையே மிஞ்சும் அளவிற்கு தங்கலான் டீசர் மிரட்டலாக இருக்கும் நிலையில் படம் வேற லெவலில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top