பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் பசுபதி, மாளவிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுதந்திர தின ஸ்பெஷலாக தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. உலக அளவில் தங்கலான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்த நிலையில் தங்கலான் பட ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விக்ரம் உள்ளிட்ட பட குழுவினர் என்ஜாய் செய்துள்ளனர். விக்ரமுக்கு மேக்கப் போடும் காட்சிகளும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அட்ராசிட்டியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.
View this post on Instagram
