#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளம்பரம் விக்ரம் சேது, காசி, அந்நியன், பிதாமகன், ஐ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். விக்ரம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் பசுபதி, மாளவிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று சுதந்திர தின ஸ்பெஷலாக தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் தங்கலான் திரைப்படத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் ரிலீசான இந்தியன் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. முன்னதாக விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தங்கலான் திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…