Categories: சினிமா

வசூலில் 100 கோடியை தாண்டிய தனுஷின் ராயன்.. OTT தளத்தில் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த 2002- ஆம் ஆண்டு ரிலீசான துள்ளுவதோ இளமை படம் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், மரியான், தங்க மகன், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இது தனுஷின் ஐம்பதாவது படம். இதுவரை ராயன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனராகவும் இந்த படத்தில் தனுஷ் வெற்றி பெற்றார் என்று தான் கூற வேண்டும். ராயன் படத்தில் அடங்காத அசுரன் பாடலில் இடம் பெற்ற உசுரே நீதான் என்ற வரிகள் சூப்பர் ஹிட் ஆனது. இதேபோல வாட்டர் பாக்கெட் பாடலும் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து ராயன் திரைப்படம் அனைவரையும் மிரள வைத்துள்ளது.

இந்த நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் ராயன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் ராயன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

admin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

9 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

9 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

9 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

10 மணத்தியாலங்கள் ago