எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் உட்படப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்தத் திரைப்படத்தின் இசையை அனிருத் அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘தளபதி கச்சேரி’ என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் கடைசியா என்ன குட்டி கதை சொல்ல போறார்? என்ற ஆர்வத்தோடு டிச.27-ம் தேதி மலேசியாவில் தளபதி திருவிழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட் விலை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, மேடை அருகில் இருக்கும் சீட்டுக்கு (Level 1) ரூ.6400, அடுத்த கட்ட வரிசை சீட்டுகளுக்கு (Level 2) ரூ.4316, தூரமாக இருக்கும் சீட்டுகளுக்கு (Level 3) ரூ.2100 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
