இரண்டு பக்க கடிதத்துடன் தனது கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக வெளியிட்ட தளபதி விஜய்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் சினிமாவில் மட்டுமின்றி மக்கள் நலனிலும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்டவர். இதற்காக அவர் தொடங்கியதே விஜய் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

   

இந்த இயக்கத்தின் மூலம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகர்  விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவித்தார்.

மேலும் ‘லியோ’ திரைப்பட  சக்ஸஸ் மீட்டிலும் அரசியல் குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.  மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தனது இயக்கத்தின் மூலமும் ரசிகர்கள் மூலமும் செய்து முடித்தார். இவை அனைத்துமே அவரின் அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி அறிவிப்பை திடீரென வெளியிட்டு தற்பொழுது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி  அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

vijay113

இந்த பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கிறார். இதன்மூலம் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஜய். இதுகுறித்து  இரண்டு பக்க கடிதத்துடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனால் தற்பொழுது தளபதி ரசிகர்கள் வெடிவெடித்து கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இதோ அந்த அறிக்கை…